ADDED : செப் 16, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த 22 வயதுள்ள இரு வாலிபர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுமிகளுக்கும் அக்கிராமத்தில் உள்ள கோயிலில் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த நம்புதாளை வி.ஏ.ஓ., ராஜேஸ் புகாரில் தொண்டி போலீசார் மற்றும் ராமநாதபுரம் சைல்டு லைன் அலுவலர்கள் சென்று தடுத்து நிறுத்தினர்.
இரு தரப்பு பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினர். அலுவலர்கள் இரு சிறுமிகளையும் ராமநாதபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.