/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புயல், மழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் ஓட்டல், தங்கும் விடுதிகள் டல்லடிக்குது
/
புயல், மழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் ஓட்டல், தங்கும் விடுதிகள் டல்லடிக்குது
புயல், மழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் ஓட்டல், தங்கும் விடுதிகள் டல்லடிக்குது
புயல், மழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் ஓட்டல், தங்கும் விடுதிகள் டல்லடிக்குது
ADDED : டிச 07, 2024 08:09 AM
ராமேஸ்வரம்: புயல் மழை எதிரொலியாக ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் ஓட்டல், தங்கும் விடுதிகள் வெறிச்சோடியது.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் எதிரொலியாக நவ.,25 முதல் 28 வரை ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசி கனமழை பெய்தது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. நவ.,29, 30ல் விழுப்புரம் முதல் சென்னை வரை கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
இந்த இயற்கை சீற்றத்தின் எதிரொலியாக ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை 50 சதவீதம் குறைந்தது. ராமேஸ்வரம் கோயிலில் டிசம்பரில் விடுமுறை நாட்கள் தவிர தினமும் 3000 முதல் 5000 பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
மேலும் கோயிலில் அதிகாலையில் நடக்கும் ஸ்படிகலிங்க பூஜையில் 5000 முதல் 8000 பக்தர்கள் தரிசிப்பார்கள். ஆனால் கனமழை, வெள்ளப் பெருக்கு எதிரொலியாக தென், வட மாநில பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் சில நாட்களாக கோயிலில் 2000 முதல் 3000 பக்தர்கள் புனித நீராடி, ஸ்படிகலிங்க தரிசனம் செய்தனர்.
தங்கும் விடுதிகளில் 60 சதவீதம் அறைகள் காலியாக இருப்பதாகவும், ஓட்டல்களில் வியாபாரம் இன்றி இழப்பு ஏற்படுவதாகவும், தமிழகத்தில் மழையின்றி போக்குவரத்து சீரான நிலையில் மக்களிடம் அச்சம் நீங்கிய பிறகு தான் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர்.