/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.டி.பி.ஐ.,மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
எஸ்.டி.பி.ஐ.,மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ.,மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ.,மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2024 08:17 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
த.மு.மு.க., மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் ஜாகிர்பாபு தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் இப்ராஹிம், செயலாளர் அப்துல் ரஹீம், நிர்வாகிகள் பரக்கத்துல்லா, ரைஸ் இப்ராஹிம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
*ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் அரசு போக்குவரத்து பணிமனை கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் முகமது சுலைமான் தலைமை வகித்தார். திருவாடானை தொகுதி செயலாளர் ஹமீது இப்ராஹிம் வரவேற்றார்.
மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் பேசினர். ராமநாதபுரம் தொகுதி தலைவர் பீர் மொய்தீன், ராமநாதபுரம் நகர் தலைவர் அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.