/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிநோக்கத்தில் எஸ்.டி.பி.ஐ., அடையாள உண்ணாவிரதம்
/
வாலிநோக்கத்தில் எஸ்.டி.பி.ஐ., அடையாள உண்ணாவிரதம்
ADDED : பிப் 17, 2024 04:43 AM
வாலிநோக்கம்: வாலிநோக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி 10 ஆண்டுகளாக மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கண்டுகொள்ளாத அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வாலிநோக்கம் நகர் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நகர் தலைவர் முகம்மது ரபீக் தலைமை வகித்தார். நகர் துணைத் தலைவர் உமர் பாரூக் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் தீன்ஸ் கான் வரவேற்றார்.
எஸ்.டி.பி.ஐ.,மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், பா.ம.க., மாவட்டச் செயலாளர் அப்துல் ஹக்கீம், முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சந்தன மேரி, எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுச் செயலாளர் பஞ்சு பீர், அ.தி.மு.க., பிரவீன் குமார், சமூக ஆர்வலர் தமிழ்வாணன், ஜஹாங்கீர் அரூசி உட்பட பலர் பங்கேற்றனர். நகர் பொருளாளர் அப்துல் ஜலீல் நன்றி கூறினார்.