/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் இடையூறு ஏற்படுத்திய தெருநாய்கள், பன்றிகள் பிடிப்பு
/
சாயல்குடியில் இடையூறு ஏற்படுத்திய தெருநாய்கள், பன்றிகள் பிடிப்பு
சாயல்குடியில் இடையூறு ஏற்படுத்திய தெருநாய்கள், பன்றிகள் பிடிப்பு
சாயல்குடியில் இடையூறு ஏற்படுத்திய தெருநாய்கள், பன்றிகள் பிடிப்பு
ADDED : டிச 30, 2024 07:54 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி சார்பில் நோய் தாக்கிய நாய்கள், பன்றிகள் பிடித்து நகருக்கு வெளியில் விட்டுள்ளனர்.
சாயல்குடியில் தொடர்ந்து வெறிநாய்கள் பொது மக்களை கடித்தும், இடையூறும் ஏற்படுத்தியும் வந்தது. ராமநாதபுரம் ரோடு, அருப்புக்கோட்டை சாலை, கன்னியாகுமரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருக்களிலும் கூட்டமாக திரிந்த வெறிநாய்கள் தொல்லை தந்தது. இது குறித்த பொதுமக்கள் புகாரில் சாலைகளில் இடையூறாக சுற்றித்திரிந்த 200க்கும் மேற்பட்ட நாய்கள் கண்டறியப்பட்டு உரிய முறையில் பிடிக்கப்பட்டன.
இதேபோல் நோய் பரப்பும் நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சுற்றித்திரிந்த 20 பன்றிகள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட நாய்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடப்பட்டது. ஏற்பாடுகளை
சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் திருப்பதி செய்தனர்.