ADDED : ஏப் 07, 2026 09:21 PM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கடம்பன்குளத்தில் தோல் உறிந்த நிலையில் நாய்கள் திரிவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
கடம்பன்குளத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாவே தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருக்களில் கூட்டமாக நாய் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். அது மட்டும் இல்லாமல் தோல் உறிந்த நிலையில் நோய் பரப்பக் கூடிய வகையில் ஏராளமான நாய்கள் உலா வருகின்றன.
இதனால் ஏதாவது தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதே போன்று முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. எனவே முதுகுளத்துார் பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
--
