ADDED : பிப் 27, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மேலமடை கிராமத்தில் திருப்புல்லாணி ஒன்றிய பா.ஜ., சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றிய சக்தி கேந்திர பொறுப்பாளர் விஸ்வநாத் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மங்களேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் பேசினார்.
ஒன்றிய பொதுச் செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய பொருளாளர் மதுரை வீரன், தமிழ் இலக்கிய கலை கலாசார பிரிவு மாவட்ட செய லாளர் இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
