ADDED : மார் 11, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார், முதுகுளத்தூர் அருகே காக்கூரில் அ.ம.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் பேசுகையில்,
அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. எங்கு சென்றாலும் சிலை வைக்கப்போகிறேன் என்று கூறி வருகிறார். தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தொகுதி வளர்ச்சிக்கு தேவையான திட்டத்தை கொண்டு வரவில்லை என்றார்.
