ADDED : ஜன 10, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மு.சாலை கிராமத்தில்
பகலில் தெரு விளக்குகள் எரிவதால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
முதுகுளத்துார் அருகே மு.சாலை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையாக பகல் நேரங்களில் தெரு விளக்கு அணைக்கப் படாததால் பகலில் எரிகிறது.
இதனால் மின்சாரம் வீணாவதுடன் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே முறையாக
தெரு விளக்குகளை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.