/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் 'ப்ரீ' போனஸ் பிரச்னையால் ஸ்டிரைக்
/
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் 'ப்ரீ' போனஸ் பிரச்னையால் ஸ்டிரைக்
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் 'ப்ரீ' போனஸ் பிரச்னையால் ஸ்டிரைக்
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் 'ப்ரீ' போனஸ் பிரச்னையால் ஸ்டிரைக்
ADDED : ஜன 14, 2025 01:38 AM

திருப்பாச்சேத்தி,: போனஸ் தொகை பாக்கியை தராததால் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி டோல்கேட் ஊழியர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வாகனங்கள் கட்டணமின்றி கடந்து சென்றன.
மதுரை - -பரமக்குடி நான்கு வழிச்சாலை 2017ல் திறக்கப்பட்டு திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இரு இடங்களில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. சபரிமலை சீசனில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது. சுங்கச்சாவடியில் மூன்று ஷிப்ட்களில் 56 பேர் பணிபுரிகின்றனர். பெரும்பாலான ஊழியர்கள் சுங்கச்சாவடி தொடங்கப்பட்டதில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் அதே ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். தீபாவளியை ஒட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டு முதல் தவணையாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதி வழங்கப்படவில்லை.
பலமுறை கேட்டும் நேற்று வரை மீதி பணத்தை வழங்காததால் நேற்று மாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்ட் டேக் ஸ்கேன் இணைப்பை துண்டித்ததால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. ஒப்பந்தம் எடுத்த கேரளாவைச் சேர்ந்த எம்.கே.டி., நிர்வாகம் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் நேற்று இரவு வரை ஸ்டிரைக் வாபஸ் பெறப்படவில்லை.

