/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குவைத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்காவிட்டால் வேலை நிறுத்தம்
/
குவைத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்காவிட்டால் வேலை நிறுத்தம்
குவைத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்காவிட்டால் வேலை நிறுத்தம்
குவைத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்காவிட்டால் வேலை நிறுத்தம்
ADDED : மார் 15, 2024 11:39 PM

ராமநாதபுரம் : குவைத்தில் சிக்கியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களை போதைப்பொருள் கடத்தியதாக பொய் வழக்குப்போட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர். அவர்களை ஒரு வாரத்தில் விடுவிக்காவிட்டால் கடல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருப்பாலைக்குடி அய்யர், கார்த்திக், மோர்ப்பண்ணை மீனவர் சந்துரு, பாசிப்பட்டினம் மீனவர் வினோத்குமார் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். ஏழை மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலப் பொது செயலாளர் அந்தோணி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் திருப்பாலைக்குடி தமிழ்காளி, மோர்ப்பண்ணை ராஜதுரை, பாசிப்பட்டினம் ஆறுமுகம் பங்கேற்றனர்.
கலெக்டர் இல்லாததால் டி.ஆர்.ஓ., கோவிந்த ராஜூலுவிடம் பேசினர்.
ஒரு வாரத்தில் மீட்டு தரவேண்டும். தாமதம் ஏற்படும் பட்சத்தில் மீனவ கிராமங்களில் வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.---------

