ADDED : செப் 17, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ரேஷன் பொருட்கள் எடை குறைந்தால் பணியாளர் 'சஸ்பெண்ட்' என்ற அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி செப்.25ல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் இது குறித்து சங்க மாநில துணைத் தலைவர் தினகரன், செயலாளர் மாரிமுத்து: ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் எடை குறைவாக பொருட்கள் வழங்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
கிடங்குகளில் இருந்தே எடை குறைவாக பொருட்கள் வழங்கப்படுகிறது. இவற்றை சரிசெய்ய வலியுறுத்தி செப்.,25ல் ஒருநாள் வேலை நிறுத்தம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர்.
