/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
/
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
ADDED : ஜன 16, 2024 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : -தைப்பொங்கல் விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ரத வீதியில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் உலா வந்தனர்.
தைப்பொங்கல் திருநாளையொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மன் சன்னதியில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ரத வீதியில் வீதி உலா வந்தனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.