/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடி பிறக்கும் முன்பே வீசும் பலத்த காற்று : வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
ஆடி பிறக்கும் முன்பே வீசும் பலத்த காற்று : வாகன ஓட்டிகள் பாதிப்பு
ஆடி பிறக்கும் முன்பே வீசும் பலத்த காற்று : வாகன ஓட்டிகள் பாதிப்பு
ஆடி பிறக்கும் முன்பே வீசும் பலத்த காற்று : வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 10, 2025 02:26 AM
திருவாடானை: ஆடி பிறப்பதற்கு முன்னரே பலத்த காற்று வீசத் துவங்கியுள்ளதால் ரோட்டோரங்களில் மணல் துாசி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழிக்கேற்ப திருவாடானை, தொண்டியில் ஆடி துவங்கும் முன்பே சில நாட்களாக பலத்த காற்று வீசத் துவங்கியுள்ளது. திருவாடானை-ஓரியூர் ரோடு, சூச்சனி-தோட்டாமங்கலம், திருவெற்றியூர், தொண்டி கடற்கரை ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோட்டோரங்களில் மண் குவியல் காணப்படுகிறது.
பலத்த காற்று வீசும் போது பறக்கும் துாசியால் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மணல் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.