/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் பலத்த காற்று படகு ஆய்வு தேதி மாற்றம்
/
தொண்டியில் பலத்த காற்று படகு ஆய்வு தேதி மாற்றம்
ADDED : மே 29, 2025 11:11 PM
தொண்டி: தொண்டி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுவதால் இன்று (மே 30) நடக்க இருந்த விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி ஜூன் 2க்கு மாற்றப்பட்டது.
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
எஸ்.பி.பட்டினம் முதல் ஆற்றங்கரை வரை 78 விசைப்படகுகளும், 2200 நாட்டுப்படகுகளும் உள்ளன. இதில் மே 30 ல் விசைப்படகுகளும், ஜூன் 3 ல் நாட்டுப்படகுகளும் ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் இன்று (மே 30) நடக்க இருந்த விசைப்படகு ஆய்வு பணியை மட்டும் ஜூன் 2ல் நடத்த இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். பாசிபட்டினம், தொண்டி, சோலியக்குடி, புதுப்பட்டினம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஒலி பெருக்கி மூலம் மரைன் போலீசார் இதை அறிவிப்பு செய்தனர்.