ADDED : ஜூலை 26, 2025 03:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-26ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை ஜூலை 31 முடிவடைகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குநர், உற்பத்தி பிரிவு, டெக்னிசியன் உள்ளிட்ட பிரிவில் ஓராண்டு தொழிற்பயிற்சியும், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் பிரிவில் இரண்டாண்டு தொழிற்பயிற்சியும் வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயதிற்குட்பட்டோர் சேரலாம். பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750, தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000, விலையில்லா சைக்கிள், சீருடை, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தனியார் நிறுவனங்களில் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் சம்பளத்தில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி, மின்னஞ்சல் முகவரியுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 04567-290212 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிலைய முதல்வர் அறிவித்துள்ளார்.