/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர் விண்ணப்பிக்கலாம்
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 03, 2024 05:04 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். https://ssp.tn.gov.in இணையதள முகவரியில் ஆதார் அட்டையை பயன்படுத்தி பிப்.29க்குள் பதிய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

