ADDED : செப் 30, 2025 04:00 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
செப்., 27, 28ல் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் பத்ரகாளி அம்மன் கோயில் வளாகம், அரசுப் பள்ளியில் துாய்மைப் பணி செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகளை சேகரித்து நகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்த துாய்மைப் பணியில் ராமேஸ்வரம் ஸ்டேட் பேங்க் மேலாளர் ராஜுகுமார், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ராமேஸ்வரத்தில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் செல்ல உள்ளனர்.