ADDED : ஜூலை 30, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் இந்திரா நகர் முகமது கனி மகன் தாவூத் இப்ராஹிம் 27. இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த 17 வயது மாணவிக்கு உடல் ரீதியாக மனரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் மாணவி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வேறு பகுதியில் குடியேறினர் அங்கும் தாவூத் இப்ராஹிம் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.அவரது தொல்லை பொறுக்க முடியாத மாணவி கடந்த மே 6ல் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
மாணவி தற்கொலையைடுத்து தலைமறைவான தாவூத் இப்ராஹீமை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். மூன்று மாதங்களுக்கு பின் தாவூத் இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர். அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

