/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுந்த மின் கம்பியை மிதித்த மாணவன் பலி
/
அறுந்த மின் கம்பியை மிதித்த மாணவன் பலி
ADDED : மே 17, 2025 01:41 AM
நயினார்கோவில்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவிலில் அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை மிதித்த பள்ளி மாணவன் பலியானார்.
நயினார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அப்போது பாப்பார்கூட்டம் கிராமத்தில் பனைமரம் முறிந்து விழுந்ததில் அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் தர்மர் மகன் கவுஷிக் 11, நேற்று மதியம் 3:00 மணிக்கு வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானான்.
மாணவன் தாளையடிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளான். நயினார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.