ADDED : டிச 26, 2025 02:52 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பொன்னவன்பிள்ளைத் தெரு பாலமுருகன் மகன் செந்துார் 15. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.
பாலமுருகனுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் மின் மோட்டாரை நேற்று செந்துார் சரி செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதம் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். மாணவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து அவர் இறந்ததாக தெரிவித்தனர். கோயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
