ADDED : அக் 04, 2024 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே பள்ளி மாணவன் பாம்பு கடித்து பலியானார்.
பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டி மகன் உதயகுமார் 14. உக்கிரபாண்டி ராமநாதபுரம் கோடவுனில் கூலி வேலை செய்கிறார். பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் உதயகுமார் காலாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தார். நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு தான் வளர்க்கும் ஆடுகளுக்கு இரை சேகரிக்க வயல் வெளிக்குச் சென்றார். அப்போது பாம்பு கடித்த நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பலியாகினார். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.