UPDATED : ஜூலை 26, 2026 06:18 PM
ADDED : ஜூலை 26, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளியில் மாணவத் தலைவர் பதவியேற்புவிழா நடந்தது.
மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி வலம்புரி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் ஹாரிஸ் அப்துல்லா பள்ளி மாணவர்களின் அணிவகுப்பை துவங்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் பார்வதி மாணவத் தலைவருக்கு பதவியேற்பு உறுதிமொழியை முன்மொழிந்தார். பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வர் விசாலாட்சி ஏற்பாடு செய்தார்.
