தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிப்பு அவசியம்

 தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிப்பு அவசியம்

 தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிப்பு அவசியம்


ADDED : மார் 09, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 08:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்றைய மாணவர்கள் பங்களிப்பு அவசியம் என மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் 2024--2025 ல் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜ சேகரன் தலைமை வகித்தார். சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

ராஜசேகரன் பேசியதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்.

தேசத்தின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியல் கல்லுாரி மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றார்.

5 துறைகளை சேர்ந்த 91 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. கல்லுாரி ஆண்டறிக்கையை டீன் உதயகுமார் வாசித்தார்.

துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் சென்னை அண்ணா பல்கலை கண்ணன், ராமநாதபுரம் மணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us