UPDATED : ஜூன் 14, 2026 12:46 PM
ADDED : ஜூன் 13, 2026 07:32 PM

கடலாடி: விடா முயற்சியால் மாற்றுத்திறனாளி மாணவி நன்கு படித்து சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.
கடலாடி அருகே ஆப்பனுாரை சேர்ந்தவர் முருகன், காளீஸ்வரி தம்பதியினரின் மகள் பவித்ரா 17. இவர் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மாணவி பவித்ரா 40 சதவீதம் உடல் இயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. 1 முதல் 5ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆப்பனுாரிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை அதே ஊரில் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
போதிய மதிப்பெண்கள் பெற்றதால் முத்துப்பேட்டையில் உள்ள ராமநாதபுரம் அரசு மாதிரி பள்ளிக்கு தேர்வாகி அங்குள்ள ஆசிரியர்களின் முயற்சியால் நல்ல மதிப்பெண் பெற்றார். நேற்று ஜே.இ.இ., தேர்வில் தேர்வாகி சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் கல்வி படிப்பதற்கு செல்ல உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி பவித்ராவை பள்ளி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் பாராட்டினர்.
---
