நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த அழகர்சாமி மகள் கீர்த்தனா 15. இவர் ராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று (ஜன.,20) பள்ளி திறந்ததால் கீர்த்தனா பள்ளிக்கு செல்லவில்லை. இதனை தாய் பஞ்சவர்ணம் கண்டித்துஉள்ளார். இதில் மனம் உடைந்த கீர்த்தனா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் பி1 போலீசார் வழக்குபதிந்தனர்.

