UPDATED : அக் 13, 2026 05:15 PM
ADDED : அக் 13, 2026 04:56 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையைச் சேர்ந்த முகமது சலீம் மகன் சர்புதீன் கான் 15. துாத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காலாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்த பின் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை தாய் சித்தி பாத்திமா கண்டித்துள்ளார்.
இதனால் சர்புதீன் கான் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் துாங்கியுள்ளனர். நேற்று காலை படுக்கை அறையில் தனியாக துாங்கிய சர்புதீன் கான் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சிறுவனின் தாய் சித்தி பாத்திமா அளித்த புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். ––
