/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்கள் பாதிப்பு : அரசு பள்ளியில் ஆங்கில வழி வகுப்பில்லை
/
மாணவர்கள் பாதிப்பு : அரசு பள்ளியில் ஆங்கில வழி வகுப்பில்லை
மாணவர்கள் பாதிப்பு : அரசு பள்ளியில் ஆங்கில வழி வகுப்பில்லை
மாணவர்கள் பாதிப்பு : அரசு பள்ளியில் ஆங்கில வழி வகுப்பில்லை
UPDATED : ஏப் 24, 2025 07:36 AM
ADDED : ஏப் 24, 2025 06:44 AM

ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி பிளஸ் 1, பிளஸ்-2 ஆங்கிவழி வகுப்புகள் துவக்கப்படாமல் உள்ளதால் அப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் ஆண்களுக்கான அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ராமநாதபுரம் நகரில் இல்லை.
நகராட்சி நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவிகள் இங்கு பிளஸ் 1 ஆங்கிவழி வகுப்புகள் இல்லாதால் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு அரசு உதவிபெறும் அல்லது தனியார் பள்ளிகளை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 3 வகுப்பறைகள் கட்டுவது மட்டும் போதாது. மேல் தளத்திலும் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். ஆங்கி வழியில் படித்துள்ள மாணவிகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2025-26ம் ஆண்டிலாவது பிளஸ் 1 ஆங்கில வழிகல்வி அரசு பள்ளிகளில் துவங்க வேண்டும்.
அதற்கு கல்வித்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
--------------