/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரியகுடி புத்துாரில் அலைபேசி சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு பரமக்குடி அருகே அவசர உதவிக்கு சிக்கல்

ADDED : அக் 01, 2024 11:14 PM

பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள அரியகுடி புத்துார் கிராமத்தில் அலைபேசி சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவசர உதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நிலையில் கண்மாய் கரைக்கு ஓடினால் மட்டுமே அலைபேசியில் பேச முடியும் என்ற சூழலில் போகலுார் ஒன்றியம் அரியகுடி புத்துார் கிராம மக்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் அரியகுடி புத்துார், முத்துசெல்லாபுரம், செங்காக்கா, முக்காணி, வாழவந்தாள்புரம் பகுதிகளில் 5000 மக்கள் வசிக்கின்றனர்.
கிராமத்தில் உள்ளவர்கள் பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட அனைத்து வகை தனியார் சிம் கார்டுகளையும் வாங்கி வைத்துள்ளனர். ஆனால் டவர் பிரச்னையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் லேப்டாப் மற்றும் வாட்ஸ்-ஆப் -ல் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர்.
மேலும் அவசர சிகிச்சை, தேவைக்கு எந்த ஒரு தொடர்பும் கிடைப்பது கிடையாது என்கின்றனர். ஊராட்சி தலைவர் கார்த்திக் கூறியதாவது:
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அலைபேசி சிக்னல் பிரச்னை உள்ளது. எந்த ஒரு அழைப்பு வந்தாலும் அலைபேசியை வெளியில் வைத்து விட்டு சென்றால் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. மேலும் கண்மாய் கரை வரை ஓட வேண்டும். இதனால் அவசர சிகிச்சைக்கும் நாங்கள் 108 உள்ளிட்டவற்றை அழைக்க முடிவதில்லை.
உடனடி மருத்துவ தேவைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. இங்கு அலைபேசி டவர் அமைக்க இடம் கொடுப்பதுடன், யார் டவர் அமைத்து கொடுக்கிறார்களோ ஒட்டுமொத்தமாக கிராம மக்கள் அந்த நிறுவனத்திற்கு மாற உள்ளோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.