/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி அருகே கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் மாணவர்கள் அச்சம்
/
பள்ளி அருகே கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் மாணவர்கள் அச்சம்
பள்ளி அருகே கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் மாணவர்கள் அச்சம்
பள்ளி அருகே கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் மாணவர்கள் அச்சம்
ADDED : மார் 04, 2024 04:57 AM

கமுதி: கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் தெரு நாய்கள் கூட்டமாக உலா வருவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.
பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புல்வாய்க்குளம், சாமிப்பட்டி, பேரையூர், கள்ளிகுளம், சேர்ந்தக்கோட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி அருகே மாணவர்கள், மாணவிகளுக்கு என்று தனித்தனியாக அரசு விடுதிகள் உள்ளது.
இதில் ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சாலையில் நடந்து வருகின்றனர்.
பள்ளி அருகே சாலையோரங்கள் மற்றும் மைதானங்களில் பத்துக்கு மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக உலா வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் ஒருசில நாய்கள் நோய் பாதிப்பால் தோல் உரிந்த நிலையில் உலா வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒருசில அச்சத்துடன் வருகின்றனர்.
பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றிலும்சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால் பள்ளி வளாகத்திலும் நாய்கள் உலா வரும் நிலை உள்ளது.
எனவே தெரு நாய்களால் மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

