/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம்
/
அரசு கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜூன் 26, 2025 10:45 PM
திருவாடானை; திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் ஆர்வமாக சேர துவங்கியுள்ளனர்.
திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.காம்., தமிழ் வழி, பி.காம்., ஆங்கில வழி ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 2ல் கலந்தாய்வு துவங்கியது.
இதில் 82 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். பி.ஏ., தமிழ் 37, பி.ஏ., ஆங்கிலம் 56, பி.எஸ்சி., கணிதம் 35, கணினி அறிவியல் 33, காட்சி தொடர்பியல் 39, பி.காம் தமிழ் வழி 31, பி.காம்., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து மாணவர்கள் கல்லுாரியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.
கலந்தாய்வு இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு உடனே சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதனை பார்த்த மாணவர்கள் அதிகமானோர் ஆர்வமுடன் சேரத்துவங்கியுள்ளனர்.
கல்லுாரி முதல்வர் பழனியப்பன் கூறுகையில், தினமும் இரண்டு முதல் மூன்று மாணவர்கள் சேர துவங்கியுள்ளனர். ஆகஸ்ட் வரை சேர்க்கை உண்டு. மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் சேரலாம் என்றார்.