/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பல்கலை சிறப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு
/
பல்கலை சிறப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு
பல்கலை சிறப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு
பல்கலை சிறப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு
ADDED : மார் 07, 2024 05:15 AM
பரமக்குடி அரசு கல்லுாரியில் வேதனை
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் யோகா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற நிலையில் சிறப்பு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தும் அதனை எழுத முடியாமல் வேதனையில் உள்ளனர்.
பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சரவணன், சசிகுமார், துர்காதேவி, காவ்யா உள்ளிட்டோர் பல்கலை நடத்தும் யோகா போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தொடர்ந்து 2023--24ம் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலை நடத்திய தென்னிந்திய பல்கலை இடையிலான தென்னிந்திய யோகா போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இதற்காக அழகப்பா பல்கலை அணிக்கு தேர்வு பெற்று 2023 நவ., 23 முதல் 29 வரை பல்கலை யோகா மையத்தில் உண்டு உறைவிட பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றனர். தொடர்ந்து டிச., 1 முதல் 4 வரை திருச்சி கொங்கு பொறியியல் கல்லுாரியில் நடந்த யோகா போட்டியில் அழகப்பா பல்கலை சார்பில் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளின் போது நவ.,ல் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பதால் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாணவர்கள் அனைவரும் தனித்தனியாக பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் மற்ற அனைத்து மாணவர்களும் தேர்வுகளை எழுதிய நிலையில் பரமக்குடி அரசு கல்லுாரியில் நான்கு மாணவர்களுக்கு மட்டும் இதுவரை எந்த தகவலும் வரவில்லை.
மாணவர்கள் நேரடியாக அழகப்பா பல்கலை பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் பேசியுள்ளனர்.
முதல்வர் மேகலா, உடற்கல்வி இயக்குனர் பிரசாத் உள்ளிட்டோர் பல்கலைக்கு தகவல் அனுப்பியும் மாணவர்களின் தேர்வு குறித்து எந்த பதிலும் கிடைக்காமல் உள்ளது.
வரும் நாட்களில் இது போன்ற போட்டிகளுக்கு அனுப்ப முடியாது என்று பெற்றோர் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

