/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 05, 2025 10:12 PM
ராமநாதபுரம்; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி 2024-25 கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கல்லுாரியில் முதலாம்ஆண்டு சேர்க்கை பெற்ற, சென்ற ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியபுதிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவிதொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகலாம். https://umis.tn.gov.in/ இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., வகுப்பு மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.