ADDED : ஜன 11, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை, தொண்டியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
காலை 9:00 மணியை கடந்தும் சாரல் மழையாக பெய்ததால் மாணவர்கள் அவசரமாக புறப்பட்டு மழையில் நனைகின்றனர்.
ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தும் பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர்.
மழை பெய்ததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி நடைபாதை வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையில் நடந்து சென்றவர்களும் அவதியடைந்தனர்.