தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆண்டு விழாவில் ஆதிவாசிகள் வேடமிட்டு அசத்திய மாணவர்கள்

 ஆண்டு விழாவில் ஆதிவாசிகள் வேடமிட்டு அசத்திய மாணவர்கள்

 ஆண்டு விழாவில் ஆதிவாசிகள் வேடமிட்டு அசத்திய மாணவர்கள்


ADDED : பிப் 19, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே செங்கப்படை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, சமத்துவ வார நினைவு விழா, சாரண, சாரணியர் பயிற்சி முகாம் முப்பெரும் விழா நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட உதவி கருவூலக் கணக்கு அலுவலர் காளிமுத்து முன்னிலை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

விழாவில் மாணவர்களின் நடனம், சிலம்பம், யோகா, பரத நாட்டியம், நாடகம் நிகழ்ச்சி நடந்தது. மேலும் மாணவர்கள் ஆதிவாசிகள் போல் நடனம் ஆடியது வரவேற்பை பெற்றது. விளையாட்டு போட்டிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us