/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் குவியும் மாணவர்கள்: நாளை கடைசி
/
ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் குவியும் மாணவர்கள்: நாளை கடைசி
ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் குவியும் மாணவர்கள்: நாளை கடைசி
ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் குவியும் மாணவர்கள்: நாளை கடைசி
ADDED : மார் 29, 2025 06:08 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புத்தத்திருவிழா மார்ச் 21 முதல் மார்ச் 30 (நாளை) வரை நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், புத்தக நேசிப்பாளர்கள், பொதுமக்கள் என தினமும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மார்ச் 21 முதல் 30 வரை 7 வது புத்தகத் திருவிழா நடத்துகின்றனர். அரங்குகளில் ரூ.1000த்திற்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தினமும் குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
ரூ.10 முதல் 50 வரை தோட்டக் கலைத்துறை சார்பில் காய்கறி, பூக்கள், பழக்கன்றுகள் விற்கப்படுகிறது. 86 அரங்குகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தினமும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கருத்துரைகள் வழங்கப்படுகிது.
பாரம்பரிய உணவுகள், ஓவியம், தொல்லியல், பயிற்சி பட்டறை மற்றும் அறிவியல் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.