/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர்நோய்தொற்று பீதியில் மாணவர்கள்
/
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர்நோய்தொற்று பீதியில் மாணவர்கள்
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர்நோய்தொற்று பீதியில் மாணவர்கள்
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர்நோய்தொற்று பீதியில் மாணவர்கள்
ADDED : ஜன 04, 2024 01:54 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜஸ்டின் காலனியில் உள்ள இன்பன்ட் ஜீசஸ்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே பல நாட்களாககழிவுநீர் தேங்கியுள்ளதால்துர்நாற்றத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் நோய் தொற்று அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடைதிட்டம் செயல்படுகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீர்சுத்திகரிப்பு மையம், குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் கழிவுநீர்ரோட்டில் ஓடுவது வாடிக்கையாகியுள்ளது.
தற்போது ராமநாதபுரம் ஜஸ்டின் காலனியில் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி அருகே கழிவுநீர் ஒருவாரத்திற்கு மேல் தேங்கியுள்ளது. தற்போது பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீர் புகுந்துள்ளது. துர்நாற்றத்தினால் காய்ச்சல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் மாணவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. ஆகையால் கழிவுநீரை அகற்றி, மீண்டும் தேங்காத வகையில்சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.