/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட மாணவர்கள் ஆர்வம்
/
மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட மாணவர்கள் ஆர்வம்
மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட மாணவர்கள் ஆர்வம்
மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட மாணவர்கள் ஆர்வம்
ADDED : பிப் 04, 2025 04:59 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தின் 78ம் ஆண்டு விழாவையொட்டி ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் இறால், நண்டு, மீன் குஞ்சுகளை வளர்த்து பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் விட்டு மீன்கள் உற்பத்தியை பெருக்குகின்றனர். மேலும் கூண்டு வலையில் மீன் வளர்க்க மானியத்துடன் நிதி, மீன் குஞ்சுகளை விஞ்ஞானிகள் வழங்கி மீனவர்களுக்கு உதவுகின்றனர்.
இந்நிலையில் 78ம் ஆண்டு விழாவையொட்டி நேற்று இங்குள்ள மீன்கள் அருங்காட்சியகத்தை காண இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
ஆராய்ச்சி நிலையத்தில் கலந்துரையாடலில் தலைமை விஞ்ஞானி வினோத், மூத்த விஞ்ஞானி ஜான்சன் ஆகியோர் மீன்கள் ஆராய்ச்சி, மீன்துறை கல்வி, நீலப்புரட்சியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மாணவர்களிடம் விளக்கினர்.

