/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்களின் நேரடி வயல்வெளி பயணம் விவசாயிகளுக்கு ஆலோசனை
/
மாணவர்களின் நேரடி வயல்வெளி பயணம் விவசாயிகளுக்கு ஆலோசனை
மாணவர்களின் நேரடி வயல்வெளி பயணம் விவசாயிகளுக்கு ஆலோசனை
மாணவர்களின் நேரடி வயல்வெளி பயணம் விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : டிச 22, 2025 05:09 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு புதுார் கிராமத்தில் கமுதி நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் 10 பேர் நேரடியாக வயல்வெளி களப்பயணம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் அதிகம் உள்ள தென்னை மரங்கள் மற்றும் தோப்புகளை ஆராய்ந்து காண்டாமிருகம் பூச்சியை எளிய முறையில் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
மாணவர்கள் கூறியதாவது: தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருகம் வண்டுகளை வாளிப்பொறி மூலமாக கட்டுப்படுத்துவார்கள். வாளிக்கு ரூ. 300 முதல் 400 வரை செலவாகும். இதனால் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. லுார் எனப்படும் இனக்கவர்ச்சி பொறியை உரக்கடைகள் மற்றும் இதற்கான மருந்து கடைகளில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். காண்டாமிருகம் பூச்சியை ஒரு லி., பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு மரத்தில் கட்டி வைத்து இலகுவாக கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

