ADDED : பிப் 27, 2024 08:06 AM
அ நிறம் | அளவு
கீழக்கரை : கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.முன்னாள் மாணவியர் சங்க தலைவி நஸ்ருல் அமீரா வரவேற்றார். மாணவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்மின் மலர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார்.
மதுரை கிரசன்ட் பி.எட்., கல்லுாரி வணிகவியல் துறை பேராசிரியர் நபிஷா தர்வேஷ், கொடைக்கானல் எம்.ஏ.எம்.அல் குலாம், பள்ளி முதல்வர் ஆயிஷா பானு, சமூக வலைதள பேச்சாளர் ஹசீனா சையத் பங்கேற்றனர்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னாள் மாணவியர் சங்க செயலாளர் அஸ்மத் ஆசிபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை மேலாளர் சேக் தாவூத்கான் செய்துஇருந்தார்.
