/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படும் மாணவர்கள்
/
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படும் மாணவர்கள்
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படும் மாணவர்கள்
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படும் மாணவர்கள்
ADDED : நவ 11, 2025 03:29 AM

ராமநாதபுரம்: மண்டபம் அருகே தரவைத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தரவைத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவர்களின் பெற்றோர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
இதில், நடுநிலைப்பள்ளியில் 100க்குமேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பெயருக்கு ஒரு கழிப்பறை உள்ளது அதுவும் சேதமடைந்துள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் அருகே மறைவான இடங்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
இதுதொடர்பாக மண்டபம் பி.டி.ஓ.,அலுவலகம், ஊராட்சி நிர்வாகத்தினர் இடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மழைபெய்தால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் குளம்போல தேங்குவாதல் மாணவர்கள் நொய்தொற்றுகளால் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளியில் கழிப்பறை கட்டித்தர வேண்டும்.
கூடுதலாக குடிநீர் வசதி மற்றும் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

