/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாமல் மாணவர்கள் தவிப்பு: 8ம் வகுப்புக்கு மேல் வெளியூர் செல்லும் அவலம்

ADDED : ஏப் 04, 2025 06:24 AM

ராமநாதபுரம்- ராமநாதபுரம் நகரில் 8 ம் வகுப்புக்கு மேல் படிக்க மாணவர்களுக்கு அரசுப்பள்ளி இல்லாததால் நீட் தேர்வில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு கிடைக்காததால் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகரில் மாணவர்கள், மாணவிகள் கல்வி பயிலும் வகையில் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளி, எம்.எஸ்.கே., நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவிகள் மட்டுமே மேல்நிலை கல்வி பயிலும் வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எட்டாம் வகுப்பு வரை இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க எந்த அரசுப்பள்ளியும் நகரில் இல்லை. குறைந்தது 15 கி.மீ., செல்ல வேண்டும். இதனால் வேறு வழியின்றி ஏதேனும் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஏழை மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்க முடியாததால் நீட் தேர்வில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்காமல் போகிறது. இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவு தகர்க்கப்பட்டுள்ளது. வள்ளல் பாரி நகராட்சிப்பள்ளியை 2021--22ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தக்கோரி பள்ளிக்கல்வி ஆணையருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இன்று வரை ராமநாதபுரம் நகர் பகுதியில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கான அரசு மேல்நிலைப்பள்ளி திறக்கப்படவில்லை.
முதல்வர் தலையிட்டு உடனடியாக இந்தப்பகுதியில் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க அரசுப்பள்ளியை திறக்க வேண்டும் என ராமநாதபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.