/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிநோக்கம் - ஏர்வாடிக்கு காலையில் பஸ் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 15, 2025 03:20 AM
ராமநாதபுரம்: வாலிநோக்கத்திலிருந்து ஏர்வாடிக்கு காலை நேரத்தில் அரசு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பள்ளி மாணவர்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலாடி ஒன்றியம் வாலிநோக்கத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் 15 கி.மீ., ல் உள்ள ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வருகிறோம். வாலிநோக்கத்தில் இருந்து 11 மாணவர்கள், 19 மாணவிகள் என 30 பேர் ஏர்வாடி பள்ளியில் படிக்கிறோம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு என்பதால் பள்ளியில் காலை 8:30 மணிக்கு சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
அந்த நேரத்தில் வாலிநோக்கத்தில் இருந்து ஏர்வாடிக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் சிறப்பு வகுப்புக்கு செல்ல முடியாமல் படிப்பு பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே காலை 8:00 மணிக்குள் வாலி நோக்கத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அல்லது அடஞ்சேரி வழியாக ஏர்வாடிக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.