/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பள்ளிக்கு செல்லும் வழியில் மதுபான கடை: சிரமப்படும் மாணவிகள்

ADDED : பிப் 18, 2025 04:57 AM

ராமநாதபுரம்: சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையால் பாதுகாப்பின்றி மாணவிகள் சிரமப்படுவதால் தனிப்பாதை வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்டெல்லா தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், மாணவிகள் தற்போது பள்ளிக்கு வரும் வழியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. மது அருந்திவிட்டு ஏராளமானோர் சுற்றித்திரிகின்றனர்.
இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மது பாட்டில்களை உடைத்து ரோட்டில் வீசுகின்றனர். திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். துர்நாற்றத்தால் மாணவிகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பள்ளிக்கு வந்து செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி புதிதாக மேற்கு பகுதியில் 20 அடியில் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.