தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்

சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்

சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்


ADDED : பிப் 04, 2023 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2023 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் 240 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம் 140 பேர் சத்துணவு சாப்பிட்டனர். முதல் சுற்றில் 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்டனர்.

அடுத்து 12 மாணவர்களுக்கு முட்டை இல்லாததால் புதிதாக வேக வைத்து முட்டை வழங்கினர். இந்த முட்டையை சாப்பிட்ட 4 மாணவிகள் உட்பட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வயிற்றுவலியால் துடித்தனர். அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நகராட்சி தலைவர் கருணாநிதி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்தனர். அழுகிய முட்டையை சாப்பிட்டனரா, அல்லது சத்துணவில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us