/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
28 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள் மலரும் நினைவுகளுடன் உற்சாகம்

ADDED : ஏப் 29, 2025 05:12 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூரில் கல்வித்துறையின் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
இங்கு 1993ம் ஆண்டில் 50 பேர் படித்த நிலையில் மஞ்சூரில் ஆசிரியர் பயிற்சி மையம் துவங்கப்பட்டது. இங்கு 1995 முதல் 1997ம் ஆண்டு வரை பயின்ற மூன்றாவது பேட்ஜ் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பட்டயபடிப்பு படித்தவர்கள் 47 பேர் ஆசிரியராக உள்ளனர்.
இவர்களுடன் 10 முன்னாள் முதல்வர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். பெஸ்ட் செட் என்ற வகையில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மேலும் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை மலர் துாவி பாதம் தொட்டு வணங்கி வரவேற்றனர்.
உடன் பயின்றவர்கள் சிலர் இறந்த நிலையில் அவர்களின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் தங்களது பேரக் குழந்தைகளுடன், ஒருவருக்கொருவர் அன்பையும், மகிழ்ச்சியும் வெளிப்படுத்தி உணவு உண்டு மகிழ்ந்தனர்.