ADDED : டிச 19, 2024 04:32 AM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: மார்கழி மாத உற்ஸவத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் திருப்பாவை பாடும் நிகழ்ச்சி நடந்தது.
மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு நடந்த திருப்பாவை நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணிலட்சுமி தலைமை வகித்தார்.
ஆன்மிக இசை நிகழ்ச்சியாக விநாயகர், கிருஷ்ணர், முருகன் பாடல்களையும் பாடினர். மாணவர்கள் ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளை இசைத்தனர். ஏற்பாடுகளை அமிர்த வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.
