ADDED : மே 04, 2025 05:30 AM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார் : திருச்சி நேரு நினைவு கல்லுாரியில் அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் சிலம்பம் தனித்திறமை போட்டி, சிலம்பம் சாதனை நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் ராமநாதபுரம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் புலிமுருகன் சிலம்பப் பயிற்சி பள்ளியில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தனித் திறமை போட்டியில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்,கோப்பை வழங்கப்பட்டது.
மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற விளங்குளத்துார் புலிமுருகன் சிலம்பப் பயிற்சி பள்ளி மாஸ்டர் முருகன் மற்றும் மாணவர்களை பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.
