/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொலைதுாரத்தில் தேர்வு மையங்களால் பி.எட்., தேர்வு எழுதும் மாணவர் அவதி
/
தொலைதுாரத்தில் தேர்வு மையங்களால் பி.எட்., தேர்வு எழுதும் மாணவர் அவதி
தொலைதுாரத்தில் தேர்வு மையங்களால் பி.எட்., தேர்வு எழுதும் மாணவர் அவதி
தொலைதுாரத்தில் தேர்வு மையங்களால் பி.எட்., தேர்வு எழுதும் மாணவர் அவதி
ADDED : மார் 28, 2025 05:39 AM
முதுகுளத்துார், மார்ச் 28--
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில் நடைபெறும் தேர்வுகள் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கு முதுகுளத்துாரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் தொலைதுாரத்தில் இருப்பதால் மாணவர்கள் வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லுாரிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர்கள் அனைவரும் 60 கி.மீ.,க்கு முதுகுளத்துார் அரசு கலை கல்லுாரியிலும், பரமக்குடி கல்வி மாவட்ட கல்லுாரி மாணவர்களுக்கு கடலாடி அரசு கலைக் கல்லுாரியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு எழுதுவதற்காக தொலை துாரமாக இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கூடுதல் செலவு செய்யும் நிலை உள்ளது.
மாணவிகள் கூறியதாவது: பி.எட்., தேர்வு துவங்கிய நிலையில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கு முதுகுளத்துாரில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 60 கி.மீ., சென்று வரும் நிலை உள்ளது. இதற்கு முன்பு அந்தந்த பகுதி உள்ள அரசு கல்லுாரியில் தேர்வு மையங்கள் செயல்பட்டு வந்தது வழக்கம்.
இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தேர்வு எழுதி முடிந்த பிறகு வீட்டிற்கு செல்வதற்கு இரவு 8:00 மணி ஆகிறது.
இதனால் அடுத்த நாள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள கல்லுாரிக்கு உச்சிப்புளி, தொண்டி திருவாடனை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் வருவதால் மீண்டும் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி வரும் காலங்களில் இதற்கு முன்பு செயல்பட்டது போல் அந்தந்த பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கவும்,தேர்வு மையங்களில் போதுமான அடிப்படை வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.