/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவகால மாற்றத்தின் போது மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு கூட்டம்
/
பருவகால மாற்றத்தின் போது மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு கூட்டம்
பருவகால மாற்றத்தின் போது மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு கூட்டம்
பருவகால மாற்றத்தின் போது மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 04, 2025 03:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில்பருவகால மாற்றத்தால் உணவுப்பொருட்கள் உற்பத்தி,கொள்முதல், விற்பனையில் ஏற்படும் வளர்ச்சி மற்றும்இடையூறுகள் மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு மற்றும்பயிற்சி பட்டறை கூட்டம் நடந்தது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையுடன் இணைந்து ஐ.நா.சபையின் உலக உணவு திட்டத்துடன் இணைந்து இந்தியாவில் ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியமாநிலங்களில் பருவகால மாற்றத்தால் உணவுப்பொருட்கள்உற்பத்தி, கொள்முதல், விற்பனையில் ஏற்படும் வளர்ச்சி மற்றும்இடையூறுகள் குறித்த ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் ராமநாதபுரத்தில் கடலாடி, கமுதி வட்டாரத்தில் தலா 10கிராமங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இது தொடர்பான பயிற்சிபட்டறை மற்றும் அதிகாரிகளுடான ஆய்வுகூட்டம் பழைய கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில் 2 நாட்கள்நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்டமன்னார் வளைகுடா வன உயிரினக் காப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் டில்லியைச் சேர்ந்த ஐ.நா., சபை உணவு பாதுகாப்புநிறுவனம்தேசிய ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கே.திருப்பதி, கொள்கை அதிகாரி சுதர்ஷா மாயா சென், மாநில திட்ட மேலாளர் அவினாஸ் திரவியம், ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் ஆகியோர் பங்கேற்றனர்.
பருவகால வாழ்வாதார வரைபடம் தயாரிப்பு மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக, குறைந்த மழை, வெயில் போன்ற கால நிலை மாற்றத்தால் ஏற்படும் சாதகம், பாதிப்புகள், மற்றும் பறவைகள் வருகை குறித்தவிபரங்களை வேளாண்துறை, வனத்துறை, வருவாய்துறைஅதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதில், வேளாண்மை வணிகம் துணை இயக்குநர்கோபிகிருஷ்ணன், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் திட்டஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், வேளாண் உதவி இயக்குநர்கள், உதவி வனகாப்பாளர் கோபிநாத் உட்படஅதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.